கர்நாடகா முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் நாளை பதவியேற்பு

சித்தராமையா தனது பதவியை கடந்த 28-ம் தேதி ராஜினாமா செய்தார்.
DK Shivakumar
Published on

கர்நாடக மாநிலத்தில் 2023-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. முதல் மந்திரியாக இருந்த சித்தராமையா தனது பதவியை கடந்த 28-ம் தேதி ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஏற்றுக் கொண்டார். புதிய முதல்வர் முறைப்படி பதவியேற்கும் வரை அவரை தற்காலிக முதல் மந்திரியாக நீடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே, துணை முதல் மந்திரியாக பதவி வகித்து வந்த டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் கர்நாடகத்தின் புதிய முதல் மந்திரியாக நாளை மாலை 4 மணிக்கு பதவி ஏற்கிறார்.

இந்தப் பதவியேற்பு விழா பெங்களூரில் உள்ள லோக்பவனில் எளிமையான முறையில் நடக்கிறது. டி.கே.சிவக்குமாருடன் 10 முதல் 20 பேர் வரை மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப் டுகிறது.

கர்நாடக மந்திரி சபை அமைப்பது குறித்து கட்சி மேலிடத் தலைவர்களுடன் ஆலோசிப்பதற்காக புதிய முதல் மந்திரியாக பதவி ஏற்கவுள்ள டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் நேற்று பிற்பகல் டெல்லி சென்றனர்.

கர்நாடக மந்திரி சபை குறித்து டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அமைப்பு செயலாளர் வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். இந்தக் கூட்டத்தில் மந்திரி சபையில் யார், யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து இறுதி முடிவு செய்யப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com