search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நடிகர் ரஜினியை விமர்சித்தால் பகை, கருத்து வேறுபாடு ஏற்படும்- தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி பேட்டி
    X

    நடிகர் ரஜினியை விமர்சித்தால் பகை, கருத்து வேறுபாடு ஏற்படும்- தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி பேட்டி

    • இரு மாநில மக்களின் நன்மையைக் கருதி முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்.
    • ஆந்திர மாநில மக்கள் தலைகுனியும்படி ஆளுங்கட்சி தலைவர்கள் குடிகாரர்கள் போல பேசுகிறார்கள் இதனை நிறுத்த வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குறித்து புகழ்ந்து பேசினார்.

    ரஜினிகாந்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சர் ரோஜா மற்றும் ஆளும் கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் விமர்சனம் செய்தனர். அவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகி ராமையா கூறியதாவது:-

    பிரபல நடிகர் ரஜினிகாந்த் குறித்து அமைச்சர்கள் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் கருத்துக்கள் தெரிவித்து விமர்சனம் செய்கின்றனர். தொடர்ந்து ரஜினியை விமர்சனம் செய்தால் ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே பகை, கருத்து வேறுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    இரு மாநில மக்களின் நன்மையைக் கருதி முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்.

    ஆந்திர மாநில மக்கள் தலைகுனியும்படி ஆளுங்கட்சி தலைவர்கள் குடிகாரர்கள் போல பேசுகிறார்கள் இதனை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×