கேரளாவில் முந்தும் காங்கிரஸ்.. முதல்வர் பதவிக்கு சசி தரூர்? - அவரே சொன்ன பதில்

இதற்கான பதில் தெளிவாகவே உள்ளது என்று பதிலளித்தார்.
கேரளாவில் முந்தும் காங்கிரஸ்.. முதல்வர் பதவிக்கு சசி தரூர்? - அவரே சொன்ன பதில்
Published on

கேரள சட்டசபை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 9.20 நிலவரப்படி 45 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 25 இடங்களில் ஆளும் இடது முன்னணி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான UDF வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், முதலமைச்சர் யாராவார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சசி தரூர், "நான் என்ன சொல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என எனக்குத் தெரியும், ஆனால் நான் எதையும் சொல்லப் போவதில்லை. இதற்கான பதில் தெளிவாகவே உள்ளது" என்று பதிலளித்தார்.

"மேலிடம் யாரை முதலமைச்சராகத் தேர்வு செய்ய விரும்புகிறதோ, அவர்களைத் தேர்வு செய்யலாம். அதற்கு எந்த சட்டப்பூர்வத் தடைகளோ அல்லது வரம்புகளோ கிடையாது" என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னரே ஒருமுறை, தான் முதலமைச்சர் பந்தயத்தில் இல்லை என்றும், தற்போதைய சூழலில் கட்சியின் வெற்றிக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் யுடிஎப் (UDF) கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கணித்துள்ளன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com