மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு- தமிழகத்தில் ப.சிதம்பரம் போட்டி

பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் அடுத்தடுத்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளதால் மாநிலங்களவைத் தேர்தல் நடவடிக்கைகளை சூடுபிடித்துள்ளன.
காங்கிரஸ் கொடி,    ப.சிதம்பரம்
காங்கிரஸ் கொடி, ப.சிதம்பரம்
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலுக்கான 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் கர்நாடகாவில் இருந்து மீண்டும் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனும், மகாராஷ்டிராவில் இருந்து மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இந்த பட்டியல் வெளியான சிறிது நேரத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 10 பேர் இடம் பெற வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ்  கட்சி வெளியிட்டது.  

இதில் தமிழகத்தில் இருந்து முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை அவர் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

மேலும் சட்டீஸ்கரில் இருந்து ராஜீவ் சுக்லாவும், ஹரியானாவில் இருந்து அஜய் மக்கானும், கர்நாடகாவில் இருந்து ஜெயராம் ரமேஷ், ராஜஸ்தானில் இருந்து முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவும், உள்ளிட்டோரும் போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மாநிலங்களவையில் காலியாக உள்ள மொத்தம் 57 இடங்களுக்கு ஜூன் 10ம் தேதி 15 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலில் வேட்புமனு தாக்கல் செய்ய மே 31 கடைசி நாள் ஆகும்.

பாடல் பாடிக்கொண்டிருந்தபோது மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல பின்னணிப் பாடகர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com