West Bengal election | முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
West Bengal election | முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்
Published on

மேற்குவங்கத்தில் வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

மேற்குவங்கத்தின் 294 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி 284 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பஹராம்பூர் தொகுதியிலும், முன்னாள் திரிணாமுல் கட்சி எம்.பி.யான மவுசம் நூர் மாலதிபூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

2021 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி தற்போது தனியாக களமிறங்குகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com