search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி ராஜ்காட் பகுதியில் தடையை மீறி காங்கிரசார் போராட்டம்

    • டெல்லி ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • என்ன நடந்தாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார்.

    புதுடெல்லி:

    எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு ஆதரவாக இன்று ஒருநாள் நாடு முழுவதும் சத்தியாகிரகம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது.

    அனைத்து மாநில, மாவட்ட தலைநகரங்களிலும் மகாத்மா காந்தி சிலை முன்பாக, காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இந்த சத்தியாகிரகம் நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

    இந்நிலையில் இன்று டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரசார் திரண்டனர். இதையடுத்து அப்பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சத்தியாகிரக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கூறி டெல்லி காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்தது.

    அப்பகுதியில் காங்கிரசார் குவிந்துள்ளதால் டெல்லி ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5க்கும் மேற்பட்டோர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து டெல்லி ராஜ்காட் பகுதியில் தடையை மீறி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    என்ன நடந்தாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார்.

    Next Story
    ×