search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றார் சோனியா காந்தி

    • மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என சோனியா காந்தி அறிவித்தார்.
    • இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறையும் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், உடல்நலத்தை கருத்தில் கொண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட்டார். அவருக்கு போதுமான எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருந்ததால் போட்டியின்றி தேர்வானார்.

    இந்த நிலையில் இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெக்தீப் தன்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    சோனியா காந்தியுடன் மேலும் பலர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உடன் இருந்தனர்.

    Next Story
    ×