காங்கிரஸ் தலைவர் கார்கே பிறந்தநாள்: பிரதமர் மோடி, ராகுல்காந்தி வாழ்த்து

மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 82 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் கார்கே பிறந்தநாள்: பிரதமர் மோடி, ராகுல்காந்தி வாழ்த்து
Published on

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 82 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவரின் எக்ஸ் பதிவில், "காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் தனது கட்சி தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் பதிவில், "கார்கே அவர்களுக்கு மிகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் அயராத சேவையும், மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பும் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. நீண்ட ஆரோக்கியத்துடன் நீங்கள் இருக்க வேண்டுமென்று அன்புடன் வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com