search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த லட்சுமண் சவதி அடானி தொகுதியில் போட்டி
    X

    லட்சுமண் சவதி

    பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த லட்சுமண் சவதி அடானி தொகுதியில் போட்டி

    • கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    • தேர்தலில் வென்று மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    மொத்தம் 224 தொகுதிகளுக்கான கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது. அங்கு ஆட்சி அமைக்க பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

    இதற்கிடையே, 124 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி கடந்த மாதம் வெளியிட்டது. தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 42 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.

    இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் மூன்றாவது கட்டமாக 43 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    இதில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் துணை முதல் மந்திரி லட்சுமண் சவதி அடானி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வாவின் மகன் நிவேதித் ஆல்வா கும்தா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இதுவரை மொத்தம் 209 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதியுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

    லட்சுமண் சவதி மூன்று முறை பெலகாவி மாவட்டம் அடானி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×