நீட் வினாத்தாள் கசிவு: பாஜ.க. அரசை வெளுத்துவிட்ட காங்கிரஸ் தலைவர்

திட்டமிட்ட கும்பல் எவரும் இதுவரை அம்பலப்படுத்தப்படவில்லை என்றும் கேரா குற்றம் சாட்டினார்.
நீட் வினாத்தாள் கசிவு: பாஜ.க. அரசை வெளுத்துவிட்ட காங்கிரஸ் தலைவர்
Published on

நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பொறுப்புடன் நடந்துகொள்ள அரசு தவறிவிட்டதாக கூறி, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கடுமையாக விமர்சித்தார்.

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நோக்கில், 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்) என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது கேரா மேற்கண்ட கருத்துகளை தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 90 வினாத்தாள் கசிவு சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், ஆனால் இதில் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரிகள், அரசியல் ஆதரவாளர்கள் அல்லது திட்டமிட்ட கும்பல் எவரும் இதுவரை அம்பலப்படுத்தப்படவில்லை என்றும் கேரா குற்றம் சாட்டினார்.

விமர்சனம்:

"சிறு தரகர்களும், வெறும் கருவிகளாக பயன்படுத்தப்பட்டவர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் உண்மையான சூத்திரதாரிகளும் அவர்களுக்கு அரசியல் ஆதரவு அளிப்பவர்களும் பொறுப்புக்கூறலில் இருந்து தொடர்ந்து தப்பித்து வருகின்றனர்," என்று அவர் கூறினார். மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் காங்கிரஸ் தலைவர் விமர்சித்தார்.

"நீட் வினாத்தாள் கசிவு குறித்து கேட்கும்போது, ​​அமைச்சர் தேசிய தேர்வுகள் முகமையை (NTA) சுட்டிக்காட்டுகிறார்; NTA அமைப்போ பாஜகவின் 'பி-டீம்' (துணைப்படை) போலச் செயல்படும் சிபிஐ-யைச் (CBI) சுட்டிக்காட்டுகிறது. பிரதமர் கூட இந்த விவகாரத்தில் முற்றிலும் மௌனம் காக்கிறார்," என்று கேரா குற்றம் சாட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com