கேரள மாநிலம் இடுக்கியில் அருவியில் தவறி விழுந்த கல்லூரி மாணவி-மாணவர் உயிரிழப்பு

அருவி தடாகத்தில் அக்சா ரெஜி, டொனால் ஷாஜி ஆகியோர் பிணமாக மிதந்தது தெரிய வந்தது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் இடுக்கியில் அருவியில் தவறி விழுந்த கல்லூரி மாணவி-மாணவர் உயிரிழப்பு
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொல்லம் தாளவூரைச் சேர்ந்தவர் அக்சா ரெஜி (வயது 18), இவர் தொடுபுழா முட்டம் பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் சைபர் செக்யூரிட்டியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இதே பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு கணிணி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தவர் டொனால் ஷாஜி (22). இவர் இடுக்கி முறிக்காச்சேரியை சேர்ந்தவர். இவர்கள் 2 பேரையும் நேற்று காணாததால் சக மாணவ-மாணவிகள் தேடினர். அவர்களது செல்போனையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இடுக்கி அருவிக்குத்து அருவி அருகே அவர்களது செல்போன் கிடப்பதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது அருவி தடாகத்தில் அக்சா ரெஜி, டொனால் ஷாஜி ஆகியோர் பிணமாக மிதந்தது தெரிய வந்தது.

அவர்கள் அருவி தடாகத்தில் தவறிவிழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com