பாஜக ஆளும் மாநிலங்களில் மீன் சாப்பிட தடை: மம்தாவுக்கு திரிபுரா முதல் மந்திரி பதில்

முதல் மந்திரி மம்தா பானர்ஜி புருலியா தொகு​தி​யில் தேர்தல் பிர​சா​ரத்​தில் ஈடு​பட்டார்.
மாணிக் சஹா
மாணிக் சஹா
Published on

மேற்​கு​வங்​கத்​தில் அடுத்த மாதம் 23, 29 ஆகிய தேதி​களில் இரு கட்​டமாக சட்டசபை தேர்​தல் நடை​பெறுகிறது.

புருலியா தொகு​தி​யில் தேர்தல் பிர​சா​ரத்​தில் ஈடு​பட்​ட முதல்​ மந்திரி மம்தா பானர்​ஜி, பாஜக ஆட்​சிக்கு வந்​தால் இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்​கும். மக்​கள் சாப்​பிட கறி, கோழி, மீன் எது​வும் கடை​யில் கிடைக்​காது. அவர்​களுக்கு மக்​களின் மதம், கலாசா​ரத்​தின் மீது நம்​பிக்கை கிடை​யாது என தெரிவித்தார்​.

இந்நிலையில், மம்தா பானர்ஜியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு திரிபுரா முதல் மந்திரி மாணிக் சஹா பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, மாணிக் சஹா கூறுகையில், பாஜக ஆளும் மாநிலங்களில் மீன்கள் உணவாக சாப்பிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். மம்தாவின் கருத்து ஆதாரமற்றது. அதிக அளவில் மீன்களை பயன்படுத்தும் மாநிலமாக திரிபுரா உள்ளது என தெரிவித்தார்.

சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த அரசியல் விவாதங்கள் மற்றும் விமர்சனங்கள் தீவிரம் அடைந்துள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com