CJP: குவியும் ஆதரவு.. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!

பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை விடப் பல மடங்கு அதிகம்
CJP: குவியும் ஆதரவு.. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
Published on

வழக்கு விசாரணை ஒன்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், " சில இளைஞர்கள் இருக்கிறார்கள், அவர்கள் கர்ப்பபான் பூச்சிகள் போல, ஒட்டுன்னிகள் போல நீதித்துறை, ஊடகம் என பல துறைகளில் ஊடுருவி சமூக வலைதள போராளிகளாக அமைப்பை தாக்க தொடங்குகின்றனர்" என பேசியிருந்தார்.

இது இளைஞர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே பின்னர் விளக்கம் அளித்த அவர், "நான் போலி சான்றிதழை கொண்டு நீதித்துறை உள்ளிட்டவற்றில் ஊடுருவும் இளைஞர்களையே கூறினேன்" என விளக்கம் அளித்தார்.

ஆனால் அதிகரிக்கும் வேலையின்மை, நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்டவை ஏற்கனவே நாட்டின் மக்கள் தொகையில் அதிகளவில் இருக்கும் இளைஞர் சமுதாயத்தை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில் சூர்யகாந்தின் விமர்சனம் இளைஞர்கள் மத்தியில் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) என பெயரில் நையாண்டியாக ஒரு அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. மே 16 அன்று அபிஜீத் தீப்கே என்பவரால் இந்த கட்சி தொடங்கப்பட்டது.

தொடங்கிய சில நாட்களிலேயே இதில் 40,000 இளைஞர்கள் இணைந்தனர். மேலும் கட்சியின் எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களை கோடிக்கணக்கானோர் பின்தொடர தொடங்கினர்.

இந்த கட்சி இளைஞர்களுக்காக, இளைஞர்களே தொடங்கியது என்றும் நாட்டில் இளைஞர்கள் சந்திக்கும் இன்னல்களை எடுத்துரைக்கவும் அரசை இடித்துரைக்கவும் உருவாக்கபட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் CJP கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்படுவதற்கு முன்பு இந்த பக்கத்தை 1.65 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்தனர்.

CJP கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டதாக கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். இது எதிர்பார்த்தது தான் என அவர் தனது எக்ஸ் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே CJPயின் இன்ஸ்டாகிராம் பக்கம் 12.6 மில்லியனுக்கும் (1.26 கோடி) அதிகமான பாலோயர்களைக் கொண்டு சாதனை படைத்துள்ளது.

இது 8.7 மில்லியன் பாலோயர்களைக் கொண்டுள்ள பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை விடப் பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com