

நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழக நூலகம் தமிழ் மற்றும் சமஸ்கிருத உரைகளை கொண்ட சோழர் காலத்து செப்பேடுகளை நேற்று முன்தினம் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தது.
11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தை சேர்ந்த இந்த செப்பேடுகள், முதலாம் ராஜராஜ சோழனால் வெளியிடப்பட்ட முதல் ஆணையாகும்.
“மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செப்புத் தகடுகளை பாதுகாப்பாக நாகப்பட்டினம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்குத் கொண்டுவரப்பட்ட 654 பழம்பொருட்கள், புதுடெல்லியில் உள்ள புராண கிலாவில் வைக்கப்பட்டுள்ளது. அவை மக்களின் பார்வைக்கு காட்சிபடுத்தப் படவில்லை.
ஆனைமங்கலம் செப்பேடுகளை தமிழகத்திற்குக் கொண்டு வந்து மாநில தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்," என்று சிபிஐ(எம்) மக்களவை எம்.பி. சு வெங்கடேசன் கூறியுள்ளார்.
“அந்த தகடுகளின் வரலாறு உண்மையாகவே யாருக்குச் சொந்தமோ, அந்த தமிழ்நாட்டில்தான் அவை காட்சிப்படுத்தப்பட வேண்டும்" என்று தொல்லியல் மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறையின் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.