நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் விஜய்

டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் விஜய்
Published on

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரண்டு நாள் பயணமாக சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லிக்குச் சென்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டார்.

டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்க்கு, பூங்கொத்து கொடுத்து அதிகாரிகள் வரவேற்றனர். மேலும், காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுக்கும் முதலமைச்சர் விஜய் இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க தமிழ்நாடு இல்லத்தில் இருந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் புறப்பட்டார்.

தமிழகத்திற்கான நிதி சார்ந்த கோரிக்கை மனுவுடன் நிர்மலா சீதாராமனை சந்திக்க முதலமைச்சர் விஜய் புறப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com