என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் SIR பணிகளுக்குப் பின் தலைமை தேர்தல் அதிகாரி பெயர்  நீக்கப்பட்டதால் அதிர்ச்சி!
    X

    கேரளாவில் SIR பணிகளுக்குப் பின் தலைமை தேர்தல் அதிகாரி பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி!

    • தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்கள் நீக்கப்பட்டது
    • BLO முன்பு ஆஜராகி பெயரை சேர்க்க ரத்தன் கேல்கர் விண்ணப்பம் அளித்தார்.

    பீகாரை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிக்பார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் அக்டோபர் 27 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் தேர்தல் ஆணையம் தனித்தனியே வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

    இதனால் 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது.

    இந்நிலையில், கேரளாவில் SIR பணிகளுக்குப் பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    2002 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், தற்போது SIR பணியின்போது பெயர் நீக்கம். இந்நிலையில் BLO முன்பு ஆஜராகி பெயரை சேர்க்க ரத்தன் கேல்கர் விண்ணப்பம் அளித்தார்.

    Next Story
    ×