மோடிக்காக சந்திரபாபு நாயுடு செய்த செயல்... பதவியேற்பு தள்ளிவைப்பு?

ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவி ஏற்க உள்ளார்.ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், ஜன சேனா 21 இடங்களிலும் வெற்றி பெற்றது.
மோடிக்காக சந்திரபாபு நாயுடு செய்த செயல்... பதவியேற்பு தள்ளிவைப்பு?
Published on

ஆந்திரா சட்டசபை தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்க உள்ளது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக வருகிற 9-ந்தேதி பதவியேற்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா ஜூன் 9-ந்தேதிக்கு பதிலாக ஜூன் 12-ந்தேதிக்கு (புதன்கிழமை) தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 8-ந்தேதி தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்க உள்ளதால் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், ஜன சேனா 21 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com