search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சண்டிகர் மேயர் தேர்தல்: ஆம் ஆத்மி வெற்றி பெற்றதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு
    X

    சண்டிகர் மேயர் தேர்தல்: ஆம் ஆத்மி வெற்றி பெற்றதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

    • ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்

    சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

    சண்டிகரில் புதிதாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை. அனைத்து வாக்குச்சீட்டுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதற்கு முன்பே (பிப் 18) பாஜகவை சேர்ந்த சண்டிகர் மேயர் மனோஜ் திடீரென தனது ராஜினாமா செய்தார். அதே சமயம் ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்.

    சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில், விசாரணைக்கு ஆஜரான தேர்தல் நடத்தும் அதிகாரி 8 வாக்குச்சீட்டுகளில் x என குறியிட்டதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி நேற்று(பிப் 19) உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×