மத்திய அரசின் 'சாண்ட்விச்' அரசியல்..! தொகுதி மறுவரையறை மசோதா மீது டி.ஆர்.பாலு ஆவேச உரை

2023ல் நிறைவேறிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மட்டுமே ஆதரவு.
மத்திய அரசின் 'சாண்ட்விச்' அரசியல்..! தொகுதி மறுவரையறை மசோதா மீது டி.ஆர்.பாலு ஆவேச உரை
Published on

தொகுதி மறுவரையறை மசோதா அறிமுக முன்மொழிடு மீதான விவாதத்தில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உரையாற்றினார்.

அப்போது,"மசோதாவை திரும்பப்பெற" வலுயுறுத்தினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

தொகுதி மறுவரையறை மசோதாவை ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை. தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பதில் திமுக உறுதியாக உள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதாவை திட்டவட்டமாக, சமரசமின்றி எதிர்க்கிறது திமுக. 2023ல் நிறைவேறிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மட்டுமே ஆதரவு.

வேண்டுமென்றே குழப்புவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு 3 மசோதாக்களையும் குழப்புகிறது.

மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை, அரசியலமைப்பு சட்டம் திருத்த மசோதா சாண்ட்விச் போல் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com