மத்திய அரசின் பத்ம விருதுகள்: 66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி

2026-ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மத்திய அரசின் பத்ம விருதுகள்: 66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி
Published on

புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் 2026-ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டிற்கு அறிவிக்கப்பட்ட மொத்த 131 விருதுகளில், இன்று முதற்கட்டமாக 2 பத்ம விபூஷன், 6 பத்ம பூஷன் மற்றும் 58 பத்மஸ்ரீ விருதுகளை மேதகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாதனையாளர்களுக்கு நேரில் வழங்கினார்.

பாலிவுட் சினிமா ஜாம்பவான் நடிகர் தர்மேந்திராவின் விருதை அவரது மனைவி ஹேமமாலினி கண்ணீருடன் பெற்றார் மற்றும் இந்தியாவின் புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் வயலின் கலைஞர் செல்வி. என். ராஜம் ஆகியோர் பத்ம விபூஷன் விருதுகளை பெற்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசுவாமி பத்ம விபூஷண் விருதை பெற்றுக்கொண்டார்.

பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்.

X

Maalai Malar
www.maalaimalar.com