மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் வெளி மாநில வாக்காளர்களை சேர்க்க பாஜக முயற்சி: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

பீகார், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சட்டவிரோத வாக்காளர்களை, வங்காளத்தின் வாக்காளர் பட்டியல்களில் சேர்க்க பாஜக முயல்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
Published on

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு எதிராக நீதிமன்றத்திலும் முறையிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் வெளிமாநில சட்டவிரோத வாக்காளர்களை மேற்கு வங்க மாநில வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்க பாஜக முயல்கிறது என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-

புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்காக ஒரே நாளில் சுமார் 30,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், தனது தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு இடையிலேயே கொல்கத்தாவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருந்ததாக அபிஷேக் (பானர்ஜி) நேற்று என்னிடம் தெரிவித்தார்.

பீகார், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சட்டவிரோத வாக்காளர்களை, வங்காளத்தின் வாக்காளர் பட்டியல்களில் சேர்க்க பாஜக முயன்று வருகிறது. பீகாரில் செய்தது போலவே, வெளியூர் வாக்காளர்களை ரயில் மூலம் அழைத்து வந்து, அசன்சோல் மற்றும் கரக்பூர் தொகுதிகளில் அவர்களை வாக்களிக்கச் செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தின் வாக்காளர் பட்டியலில், வெளியிலிருந்து சட்டவிரோத வாக்காளர்களைத் திணிக்க பாஜக முயன்றால், மக்கள் அதை எதிர்த்து நிற்பார்கள்.

இதற்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது; ஏனெனில், பீகார் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் காவி கட்சி இத்தந்திரத்தை நடைமுறைப்படுத்தி, அங்குள்ள எதிர்க்கட்சிகள் இச்சூழ்ச்சியைப் புரிந்துகொள்வதில் தவறியதால் அதிலிருந்து தப்பித்துக்கொண்டது என்பதை வங்காள மக்கள் நன்கு அறிவர்.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com