மேற்கு வங்கம் மற்றும் அசாம் பாஜக சட்டமன்ற குழு தலைவர்கள் யார்?- அமித் ஷா, நட்டா பார்வையாளர்களாக நியமனம்

மேற்கு வங்க மாநிலத்தில் முதன்முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. சுவேந்து அதிகாரி முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் அசாம் பாஜக சட்டமன்ற குழு தலைவர்கள் யார்?- அமித் ஷா, நட்டா பார்வையாளர்களாக நியமனம்
Published on

தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலத் தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில் மேற்கு வங்கம் மற்றும் அசாமில் பாஜக அபார வெற்றி பெற்றது.

அசாம் மாநிலத்தில் ஹாட்ரிக் சாதனைப் படைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் முதன்முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் ஹிமாந்தா சர்மா மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

என்றபோதிலும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி முதல்வர் யார் என்பதை தேர்வு செய்து பின்னர் முடிவு அறிவிக்கப்படும்.

பாஜகவின் மேற்கு வங்க சட்டமன்றக்குழு தலைவராக தேர்வு செய்யப்படுபவர் முதல்வராக பதவி ஏற்பார். சட்டமன்றக்குழு தலைவரை தேர்ந்தேடுக்கும் பணிக்கு அமித் ஷா மத்திய பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநில பாஜக சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மத்திய பார்வையாளராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com