மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா பெரும்பான்மை பெறாமல் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது.
பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!
Published on

மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் போதிய ஆதரவு கிடைக்காததால் தோல்வி அடைந்தது.

489 பேர் வாக்களித்த நிலையில், ஆதரவாக 278 வாக்குகளும், எதிராக 211 வாக்குகளும் கிடைத்தன. எனினும், இது அரசியலமைப்பு திருத்த மசோதா என்பதால் நிறைவேறத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் இது தோல்வியடைந்தது.

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு அவசர அவசரமாக தொகுதி மறுவரையறை செய்யப்படுவது நியாயமற்றது என்றும், இது தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் என்றும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும் தென் மாநில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் மசோதா தோல்வியடைந்துள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததால், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதாவும் நடைமுறைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com