

மேற்கு வங்க மாநிலத்தில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
அதன்படி,
மாட்ரிஸ் கருத்துக் கணிப்பு:
-------------------
பாஜக - 146 முதல் 161 இடங்கள்
திரிணாமுல் - 125 முதல் 140 இடங்கள்
மற்றவை - 6 முதல் 10 இடங்கள்
பி மார்க் கருத்துக் கணிப்பு
----------------
பாஜக - 150 முதல் 175 இடங்கள்
திரிணாமுல் - 118 முதல் 138 இடங்கள்
காங்கிரஸ் - 2 முதல் 26 இடங்கள்
------------
பிரஜா போல் கருத்துக் கணிப்பு
------------
பாஜக - 178 முதல் 208 இடங்கள்
திரிணாமுல் - 85 முதல் 110 இடங்கள்
மற்றவை - 0 முதல் 5 இடங்கள்
நடைபெற்று முடிந்துள்ள 5 மாநில தேர்தல்களில் பா.ஜ.க. 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.