ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார் நிதிஷ் குமார்

இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் நிதிஷ் குமார். நிதிஷ் குமார் பீகார் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார் நிதிஷ் குமார்
Published on

புதுடெல்லி:

ஐக்கிய ஜனதா தள கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவராக இருந்த ராஜிவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், பீகார் மாநில முதல் மந்திரியாக இருக்கும் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியை இன்று ஏற்றுக் கொண்டார்.

சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் ஜனவரி மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதியை பங்கீட்டை முடிக்க வேண்டும் என நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com