

புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் ஆசிரியை மமிதா மெஹர் கொலை வழக்கில் மாநில அமைச்சர் திவ்ய சங்கர் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டு வலுத்துளள்து. அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து போராடிவருகின்றனர். சட்டசபையிலும் இந்த பிரச்சனையை எழுப்பி அமளியில் ஈடுபடுகின்றனர்.
இந்த விவகாரத்தை முன்வைத்து, பாஜகவின் இளைஞரணியினர் சட்டசபையை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று சட்டசபையை முற்றுகையிட்டு அமைச்சர் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்கும்படி முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.