சட்டமன்றத் தேர்தல்: புதுச்சேரி, கேரளா, அசாமில் வாக்குப்பதிவு தொடங்கியது! | Assembly election

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 294 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர்.
சட்டமன்றத் தேர்தல்: புதுச்சேரி, கேரளா, அசாமில் வாக்குப்பதிவு தொடங்கியது!  | Assembly election
Published on

அண்டை மாநிலமான கேரளம், யூனியன் பிரதேசமான புதுச்சேரி, வடகிழக்கு மாநிலமான அசாம் ஆகியவற்றில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 9) தொடங்கியது .

பிரசார களம் ஓய்ந்த நிலையில் மக்கள் இன்று தங்கள் ஜனநாய கடமையை ஆற்ற ஆர்வமுடன் வாக்குச்சாவாடிகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர். முன்னதாக கட்சிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது.

அதிகாரிகள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் சுமூகமான வாக்குப்பதிவை உறுதி செய்ய முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

மூன்றையும் சேர்த்து மொத்தம் 5.3 கோடி வாக்காளர்கள் இன்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர்.

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 294 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர். அங்கு ரங்கசாமி தலைமையில் ஆளும் என்டிஏ கூட்டணிக்கும் திமுகவுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. புதுவரவு விஜய்யின் தவெகவும் அங்கு களம் காண்கிறது.

கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் பினராயி விஜயன் தலைமையில் ஆளும் இடது முன்னணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. கேரளாவில் மொத்தம் 985 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஹிமாந்தா பிஸ்வா தலைமையில் பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆளும் அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. அங்கு என்டிஏ மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. அசாமில் மொத்தம் 789 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கேரளா, அசாம் புதுச்சேரி ஆகியவற்றுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com