

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதட்டங்களின் பின்னணியில், ஆந்திரப் பிரதேச அரசு 'என் நாடு, என் பொறுப்பு' என்ற பெயரில் சிக்கன நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனான கூட்டத்தில், அரசு மேற்கொள்ளவிருக்கும் சிக்கன நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்தார்.
பின்னர் அவர் மேலும் கூறியதாவது:-
நாடு நமக்கு நிறைய கொடுத்திருக்கிறது. இப்போது நாம் நாட்டிற்குத் திருப்பிக் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. ஆந்திராவில் பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்றவற்றை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
அரசு அலுவலகங்களில் ஏசி பயன்பாட்டை குறைக்க வேண்டும். மாநிலத்தில் வெள்ளிக்கிழமை தோறும் வாகனம் இல்லா தினம் திட்டத்தை கடைபிடிக்க வேண்டும். அன்றைய தினம் அமைச்சர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், மாணவர்கள் சைக்கிளில் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.