பெங்களூருவில் சீட்டுக்கட்டு போல சரிந்த அடுக்குமாடி கட்டடம்.. உள்ளே சிக்கிய 17 பேர் - பரபரப்பு வீடியோ

அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு உள்ளே சிக்கினர்.கனமழை பெய்து வருவதால் மீட்பு பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவில் சீட்டுக்கட்டு போல சரிந்த அடுக்குமாடி கட்டடம்.. உள்ளே சிக்கிய 17 பேர் - பரபரப்பு வீடியோ
Published on

கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தலைநகர் பெங்களூருவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி   கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் ஹென்னூர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பாபுசாபல்யா பகுதியில் கனமழைக்கிடையில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு உள்ளே சிக்கினர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளுக்கு உள்ளிருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் 17 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. எனவே அவர்களை  மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கட்டடம் இடித்து விழும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com