விமான நிலையத்தின் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற ஏர் இந்தியா விமானம்..

விமானம் தரையிறங்கும் போது அதன் மூன்று டயர்கள் வெடித்ததாக கூறப்படுகிறது. மற்றொரு ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
விமான நிலையத்தின் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற ஏர் இந்தியா விமானம்..
Published on

கொச்சியில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானம் இன்று (திங்கள்கிழமை) மதியம், மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றது.

அந்த நேரத்தில் பெய்த கனமழை காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் பிரதான ஓடுபாதையில் சிறிய சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், விமானம் தரையிறங்கும் போது அதன் மூன்று டயர்கள் வெடித்ததாக கூறப்படுகிறது. விமானத்தின் இயந்திரமும் சிறிய அளவில் சேதமடைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையே மற்றொரு ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இன்று மாலை டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 160 பயணிகளுடன் கொல்கத்தாவுக்குப் பறக்கவிருந்த விமானத்தில் இந்தப் பிரச்சினை கண்டறியப்பட்டது. புறப்படுவதற்கு முன்பே அது கண்டறியப்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com