ஏர்போர்ட், பள்ளிகளைத் தொடர்ந்து திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

சில மருத்துவமனைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல்வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏர்போர்ட், பள்ளிகளைத் தொடர்ந்து திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

தலைநகர் மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள பல பள்ளிகள் வெடிகுண்டு மிரட்டல் குறித்து புகாரளித்த சில வாரங்களுக்குப் பிறகு, டெல்லியில் உள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் மூலம் வந்தன. டெல்லியில் உள்ள சில மருத்துவமனைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஜி.டி.பி. மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்தேவார் மருத்துவமனை, தீப்சந்தூர் மருத்துவமனை ஆகிய 4 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விமான நிலையம் மற்றும் பள்ளிகளைத் தொடர்ந்து, டெல்லி திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது.

இதைதொடர்ந்து, டெல்லி போலீசார் சிறைக்குள் சோதனை நடத்தி வருகின்றனர், இதுவரை வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.

இந்த மிரட்டல் குறித்து டெல்லி காவல்துறைக்கு சிறை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், முக்கிய அரசியல்வாதிகள் உட்பட சில உயர்மட்ட கைதிகள் உள்ள சிறைக்குள் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com