அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.10,000-ஆக உயரும் ஓய்வூதியம்? PFRDA தலைவர் முக்கிய தகவல்!

60 வயதுக்குப் பிறகு குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.5,000 வரை மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.10,000-ஆக உயரும் ஓய்வூதியம்? PFRDA தலைவர் முக்கிய தகவல்!
Published on

இந்தியாவில் உள்ள முறைசாராத் தொழிலாளர்களுக்காகச் செயல்பட்டு வரும் ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையை ரூ.10,000 ஆக உயர்த்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய விதிமுறைகளின்படி, இந்தத் திட்டத்தில் இணையும் சந்தாதாரர்களுக்கு அவர்களின் பங்களிப்புத் தொகைக்கு ஏற்ப, 60 வயதுக்குப் பிறகு குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.5,000 வரை மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போதைய வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, இந்த அதிகபட்ச ஓய்வூதிய வரம்பை ரூ.10,000 ஆக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்த வரம்பு உயர்வு விரைவில் அமலுக்கு வரலாம் எனத் தற்போதைய அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) தலைவர் எஸ். ராமன் பேசுகையில், "அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மிக விரைவில் இத்திட்டத்தின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டும்" என முறைசாராத் தொழிலாளர்கள் மத்தியில் கூறியிருப்பது நல்ல வரவேற்பையும், அவர் மீதான நம்பிக்கையையும் பெற்றுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து வகையான ஓய்வூதியத் திட்டங்களையும், அதன் நிதி நிலவரங்களையும் ஒழுங்குபடுத்தும் மற்றும் கண்காணிக்கும் மத்திய அரசின் உச்சகட்ட அதிகாரம் பெற்ற அமைப்பே இந்த PFRDA (Pension Fund Regulatory and Development Authority) திட்டத்தின் நோக்கமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com