

மேற்கு வங்கத்தில் 15 வருடமாக முதலமைச்சராக இருந்த மம்தா பானர்ஜியும், அவரது கட்சியுமான திரிணாமுல் காங்கிரசும் வீழ்த்தப்பட்டது. அம்மாநிலத்தில் முதல் முறையாக பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது. சுவேந்து அதிகாரி முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
தேர்தலுக்கு முன்பாகவும், தேர்தலுக்கு பின்பும் அங்கு மோதல், கலவரம் ஏற்பட்டது. இவ்வாறு ஏற்பட்ட மோதலில் சோனர்பூரைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார். அவரது வீட்டிற்கு அபிஷேக் பானர்ஜி இன்று காலை சென்றார்.
அப்போது கிரிக்கெட் ஹெல்மெட் அணிந்து சென்றார். அவரை உள்ளூரைச் சேர்ந்த சிலர் வழி மறித்து தாக்குதல் நடத்தினர். அவர் மீது முட்டைகளை வீசினர். அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இவர் மக்களை எம்.பி.யும் ஆவார். இவர் மீதான தாக்குதல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்றாலும், பாதிக்கப்பட்ட தொண்டரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், தன்னை தாக்கியவர்கள் பாஜக ஆதரவு பெற்றவர்கள். அவர்கள் என்னை கொல்ல விரும்பினர். இதுதான் ஜனநாயகத்திற்கான அவர்களுடைய உதாரணம். தேர்தல் முடிந்து ஒரு மாதம் கூட ஆகல. அதற்குள் இப்படி ஒரு தாக்குதல் என அபிஷேக் பானர்ஜி கடுமையாக பாஜக-வை விமர்சித்தார்.
மம்தா பானர்ஜியும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.