இசை உலகின் பேரிழப்பு..! ஆஷா போஸ்லே மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்

ஆஷா போஸ்லேவின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இசை உலகின் பேரிழப்பு..! ஆஷா போஸ்லே மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்
Published on

மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92) உடல் நலக்குறைவு காரணமாக தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஆஷா போஸ்லேவுக்கு நேற்று மதியம் வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், ஆஷா போஸ்லேவின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆஷா போஸ்லேவின் மறைவுக்கு இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

மாபெரும் பாடகி ஆஷா போஸ்லே அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது.

அவரது குரலின் வழியே, அவரது கலை நம்மிடையே என்றென்றும் அழியாமல் நிலைத்திருக்கும்.

இந்தத் துயர நேரத்தில், அவரது அன்புக்குரியவர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com