85 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை- வாலிபர் கைது

மூதாட்டியின் உறவினர்கள் பக்கத்து வீடுகளில் வசித்து வருகின்றனர்.போலீசார் ராகேசை கைது செய்தனர்.
85 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை- வாலிபர் கைது
Published on

பரேலி:

உத்தரபிரதேச மாநிலம் பரேலி அருகே உள்ள ஹபீஸ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (வயது35). அதே பகுதியில் கணவர், மகனை இழந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். அந்த மூதாட்டியின் உறவினர்கள் பக்கத்து வீடுகளில் வசித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று மதியம் ராகேஷ் அந்த மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளார். அப்போது மூதாட்டியின் உறவுக்கார பெண் ஒருவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் இதைப்பார்த்ததும் சத்தம் போட்டார். உடனே ராகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

பாதிக்கப்பட்ட மூதாட்டியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் இந்த சம்பவத்தில் அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். கொலை குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராகேசை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com