டாக்டர் கனவை நிறைவேற்ற 71 வயதில் ‘நீட்’ தேர்வு எழுதிய முதியவர்

மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுகளில் இவரால் வெற்றி பெற முடியவில்லை.
டாக்டர் கனவை நிறைவேற்ற 71 வயதில் ‘நீட்’ தேர்வு எழுதிய முதியவர்
Published on

உத்தரபிரதேசம் லக்னோவை சேர்ந்தவர் அசோக் பாஹர் (வயது71). உத்தரகாண்டில் உள்ள இந்திய மருந்துகள் நிறுவனத்தில் (ஐ.டி.பி.எல்.) மார்க்கெட்டிங் பிரிவு தலைவராகவும், வெளியுறவுத் துறையில் ஆலோசகராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

இவரது மனைவி டாக்டர் மஞ்சு பாஹர். மகப்பேறு டாக்டர் அசோக் பாஹரின் தந்தையும் லக்னோவில் பிரபல மருத்துவராக இருந்தவர். அதனால் இவரும் மருத்துவராக வேண்டும் என இவரது தாய் விரும்பி உள்ளார்.

ஆனால் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுகளில் இவரால் வெற்றி பெற முடியவில்லை. இவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் சுமார் 20 பேர் டாக்டர்களாக உள்ளனர். பலர் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர்.

அதனால் தனது டாக்டர் கனவை நிறைவேற்ற 71 வயதில் நீட் தேர்வு எழுதி உள்ளார் அசோக் பாஹர். இவர் டாக்டராகி ஹெபடா லஜி படிப்பை முடித்து கல்லீரல் நோய் நிபுணராக வேண்டும் என விரும்புகிறார். 71 வயதில் இவர் நீட் தேர்வு எழுதும் செய்தி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

பலர் இவரது முயற்சியை ஊக்குவித்தாலும், சிலர் இந்த வயதில் மருத்துவம் படிப்பது வீண், காலம் கடந்த செயல் என்றும் மற்றொருவரின் டாக்டர் சீட் வாய்ப்பை கெடுப்பது போன்றது எனவும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com