கட்சித் தாவும் 7 ஆம் ஆத்மி எம்.பி.க்கள் - மாநிலங்களவையில் 147 ஆக உயரும் பாஜக கூட்டணியின் பலம்

ராகவ் சத்தாவை, சந்தீப் பதாக், ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் சஹ்னி, சுவாதி மலிவால் மற்றும் அசோக் மிட்டல் ஆகிய 7 பேர் கட்சித் தாவ உள்ளனர்.
கட்சித் தாவும் 7 ஆம் ஆத்மி எம்.பி.க்கள் - மாநிலங்களவையில்  147 ஆக உயரும் பாஜக கூட்டணியின் பலம்
Published on

கடந்த சில ஆண்டாகவே மோடிக்கு எதிராகப் பேச அச்சப்படுவதாக கூறி ஆம் ஆத்மி மாநிலங்களவை துணைத்தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா அண்மையில் நீக்கப்பட்டார்.

இந்த சூழலில் ராகவ் சத்தா தன்னை பாஜகவில் இணைத்துகொள்வதாக இன்று டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில்அறிவித்தார்.

தங்கள் பதவியை ராஜினாமா செய்த மேலும் 6 ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பிக்கள் தன்னுடன் பாஜகவில் ஐக்கியமாக உள்ளதாக அவர் அறிவித்தார்.

ராகவ் சத்தாவை, சந்தீப் பதாக், ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் சஹ்னி, சுவாதி மலிவால் மற்றும் அசோக் மிட்டல் ஆகிய 7 எம்.பிக்களும் பஞ்சாபை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதனால் மாநிலங்களவையில், பாஜக கூட்டணியின் பலம் 147 ஆக உயர உள்ளது.

இந்தியா கூட்டணிக்கு 78 எம்.பி.க்களும், இரு கூட்டணிக்கு வெளியே 19 எம்.பி.க்களும், ஒரு இடம் தற்போது காலியாகவும் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com