மேற்கு வங்காளத்தில் 5 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு - தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை

152 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப் பதிவு (23-ந்தேதி) நடைபெற்றது.
மேற்கு வங்காளத்தில் 5 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு - தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை
Published on

கொல்கத்தா:

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி 152 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப் பதிவு (23-ந்தேதி) நடைபெற்றது. 92.7 சதவீத வாக்குகள் பதிவானது.

இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் தேர்தலின்போது நடுநிலை தவறியதாக 5 போலீஸ் அதிகாரிகள் மீது தலைமை தேர்தல் ஆணையம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்தீப் கராய், உட்கோட்ட போலீஸ் அதிகாரி சஜல் மண்டல், பொறுப்பு இன்ஸ்பெக்டர் கள் மவுஷம் சக்கரவர்த்தி, அஜய் பக் மற்றும் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சுபேச்சா பக் ஆகிய 5 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்கள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாகவும், நடுநிலை தவறியதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com