என் மலர்
இந்தியா

உ.பி.யில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து- 5 பேர் பலி
- தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
- 8 பேர் காயம் அடைந்தனர். 10 பேர் பத்திரமாக மீட்பு.
உத்தரபிரதேச மாநிலம் கோக்ராஜ் அருகே கான்பூர் நெடுஞ்சாலையில் ஒரு பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இதில் 20 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 12 மணி அளவில் பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பயங்கர வெடிச் சத்தம் கேட்டது.
இதில் 5 பேர் தீயில் கருகி பலியானார்கள். 8 பேர் காயம் அடைந்தனர். 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
தீயணைப்பு படையினர் பல வண்டிகளில் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






