2021-ஐ விட 40% அதிகம்: 2026 தேர்தல்களில் ரூ. 1,445 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்!

தமிழ்நாடு உட்பட 5 மாநிலத் தேர்தல்களில் இதுவரை ரூ. 1,445 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2021-ஐ விட 40% அதிகம்: 2026 தேர்தல்களில் ரூ. 1,445 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்!
Published on

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற 5 மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் இதுவரை ரூ.1,445 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சட்டவிரோதப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது 2021-ஆம் ஆண்டு தேர்தல்களுடன் ஒப்பிடும்போது சுமார் 40% அதிகமாகும். 2021ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ. 1030 கோடியாக இருந்தது.

மேற்குவங்கம் பறிமுதல் நடவடிக்கைகளில் 68.92% உயர்வுடன் முதலிடத்தில் உள்ளது. 48.40% உயர்வுடன் இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ரொக்கப் பணம், தங்கம், இலவசப் பொருட்கள், போதைப்பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் மூலம் இந்த சோதனைகள் தீவிரமாக நடத்தப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com