

பிரதமர் நரேந்திர மோடி தனது ஐரோப்பிய நாடுகளுக்கு பயணத்தை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று நெதர்லாந்தின் பயணத்தை சிறப்பாக முடித்துவிட்டு, பின்பு இன்று நார்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவிற்கு வந்தடைந்தார்.
நார்வே நாட்டிற்கு இந்தியா தலைமையில் 1983 ஆம் இந்திரா காந்தி சென்றிருந்தார். 43 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பிரதமர் வருகை தந்ததற்கு விமான நிலையத்திலேயே நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர் மற்றும் அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்திய பிரதமர் மோடியும், நார்வே நாட்டின் மன்னர் ஹரால்டு 5 மற்றும் அரசி சொஞ்சா ஆகியோரை அவர்களது அரண்மனையில் நேரில் சந்தித்துப் பேசுகிறார். இது இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சார மற்றும் ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் ஒரு மரியாதையான சந்திப்பாக நடைபெற்றது.
பிறகு, விண்வெளி ஆராய்ச்சி, டிஜிட்டல் தொழில்நுட்பம், சுகாதாரம், கடல்சார் பொருளாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் அரசு மற்றும் வணிக ரீதியான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றிய ஆலோசனையும் நடத்தப்பட்டது.
உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் குறித்து விவாதித்த இரு தலைவர்களும், வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே அமைதி காண முடியும் என்று வலியுறுத்தினர்.
பயங்கரவாதத்தை ஒழிக்க நார்வே இந்தியாவுடன் இணைந்து நிற்பதற்கு இந்திய பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, நாளை ஒஸ்லோவில் 3-வது இந்தியா - நார்டிக் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் பிரதமர் மோடியுடன் நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய 5 நார்டிக் நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியாவுக்கும் இந்த நாடுகளுக்கும் இடையே அண்மையில் நடைமுறைக்கு வந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீடுகளைப் பலமடங்கு அதிகரிப்பது, ஆர்க்டிக் பிராந்திய ஆராய்ச்சி மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.