என் மலர்

  இந்தியா

  மக்களவை
  X
  மக்களவை

  தமிழக ஆளுநர் விவகாரம் - மக்களவையில் தி.மு.க. எம்பிக்கள் வெளிநடப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மக்களவையில் ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே, தமிழக ஆளுநரை திரும்பப் பெறு என தமிழக ஆளுநருக்கு எதிராக தி.மு.க. எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
  புதுடெல்லி:

  மக்களவை பொதுச்செயலாளருக்கு தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் ஒன்றை அளித்தார். அதில், தமிழக ஆளுநர் சட்டப்பிரிவு 200-ன் படி தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற தவறியுள்ளார். இதனால் அரசியலைமைப்பு சாசன சட்டச் சிக்கல் எழுந்துள்ளது.

  தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. மேலும் 3 மசோதாக்களை அவர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் தாமதம் செய்கிறார். இதுகுறித்து உள்துறை மந்திரி விளக்கம் தரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

  இதற்கிடையே, மக்களவை இன்று கூடியதும், தமிழக ஆளுநரை வாபஸ் பெறக்கோரி தி.மு.க. எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர்.

  ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே, தமிழக ஆளுநரை திரும்பப் பெறு என தமிழக ஆளுநருக்கு எதிராக தி.மு.க. அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தி.மு.க. எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
  Next Story
  ×