மத்திய பிரதேசத்தில் சோகம்: பஸ், பிக்கப் வாகனம் மோதியதில் 10 பேர் பலி

விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தில் சோகம்: பஸ், பிக்கப் வாகனம் மோதியதில் 10 பேர் பலி
Published on

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் பேருந்தும் பிக்கப் வாகனமும் மோதிக் கொண்டன.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல் மந்திரி மோகன் யாதவ், அவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com