100 சுய மரியாதை திருமணத்தை நடத்தி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

ஈரோடு மண்டல தி.மு.க. மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட சுயமரியாதை இலவச திருமணத்தை மு.க.ஸ்டாலின் நடத்தி வைக்கிறார்.
100 சுய மரியாதை திருமணத்தை நடத்தி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
Published on

ஈரோடு:

பெருந்துறை அருகே கோவை நெடுஞ்சாலையோரம் தி.மு.க. மண்டல மாநாடு நடக்கிறது. மார்ச் மாதம் 24,25 ஆகிய 2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மாநாட்டை சிறப்பாக நடத்த 25 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநாடு சிறப்பாக நடக்க தினமும் ஈரோடு மாவட்ட கட்சி தலைவர்கள் மாநாட்டு திடலுக்கு சென்று ஆலோசனை கூட் டம் நடத்தி வருகிறார்கள்.

மாநாட்டு வரவேற்பு குழு தலைவரும் முன்னாள் அமைச்சருமான முத்துசாமி கூறியதாவது:-

மாநாடு சிறப்பாக நடக்க செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்ட மாநாட்டை வெற்றி மாநாடாக தமிழ்நாடே ஏன் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு நடத்தி காட்டி இனிமேல் தி.மு.க.வில் எந்த மாநாடும் எங்கு நடந்தாலும் ஈரோடு மண்டல மாநாடு முன்னுதாரணமாக இருக்கும். திருப்புமுனை மாநாடாக இந்த மாநாடு அமையும்.

இந்த மாநாட்டில் இளைஞர் எழுச்சி நாள், தளபதி பிறந்த நாளையொட்டி 100-க்கும் மேற்பட்ட சுயமரியாதை இலவச திருமணத்தை மு.க. ஸ்டாலின் நடத்தி வைக்கிறார். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com