பள்ளி பஸ் மீது கர்னி சேனா அமைப்பினர் தாக்குதல்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

பள்ளி பஸ் மீது கர்னி சேனா அமைப்பினர் தாக்குதல்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

‘பத்மாவத்’ படத்துக்கு எதிராக போராட்டக்காரர்கள் என்ற போலியான போர்வையில் பள்ளிக் குழந்தைகள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது கவலையளிப்பதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on

சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:-

‘பத்மாவத்’ படத்துக்கு எதிராக போராட்டக்காரர்கள் என்ற போலியான போர்வையில் பள்ளிக் குழந்தைகள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது கவலையளிக்கிறது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பா.ஜ.க. அரசு சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் இதுபோன்ற செயல்களை கண்டும் காணாமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

ஆகவே, உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு வன்முறையாளர்களிடம் இருந்து பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com