

தென்காசி:
தென்காசி அருகே உள்ள இலஞ்சியில் மண்பாண்ட தொழிலாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்க கட்டிடத்தை அமைச்சர் ராஜலெட்சுமி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வசந்தி முருகேசன் எம்.பி., செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன், பேரூர் செயலாளர்கள் கார்த்திக்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் காத்தவராயன், அரசு வக்கீல் சின்னத்துரை பாண்டியன், உதவி இயக்குனர் சுதாகர், டாக்டர் சங்கரி, நகர செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, வீட்டுவசதி சங்கத்தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் வினீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தலைவர் சங்கரன் நன்றி கூறினார்.