புதுவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
Published on

புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், உணவு மற்றும் சுகாதார வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதையடுத்து மருத்துவமனை அதிகாரிகள், டாக்டர்கள், செவிலியர்களை சந்தித்து சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் குறித்தும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அவர், நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்தித் தருமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், கொரோனா மாநில ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் ரமேஷ், மருத்துவ கண்காணிப்பாளர் வாசுதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com