

தீவிரவாதத்துக்கு தனது இன்னுயிரை நீத்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 26-வது ஆண்டு நினைவுநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாட்டில் 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரம் செய்யவந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 21-5-1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அவரது 26-வது நினைவுதினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.