மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றி

கேரளாவுக்கு நிவாரண பொருள் அனுப்பிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
பினராயி விஜயன் டுவிட்டர் பதிவு
பினராயி விஜயன் டுவிட்டர் பதிவு
Published on

சென்னை:

கேரள மாநிலத்தில், தென் மேற்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர்.

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கும்படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் சேகரிக்கப்பட்ட பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கடந்த 14-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட லாரிகளில், ரூ.82 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து அனுப்பி வைத்தார். இந்த பொருட்கள் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்ட கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அதை அனுப்பி வைத்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

சகோதரத்துவ அன்பின் வெளிப்பாடாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவுவதற்காக நிவாரண பொருட்களை லாரிகளில் அனுப்பி வைத்துள்ளார். அவருக்கு நன்றி.

இவ்வாறு பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com