ஈரான்: கொரோனாவுக்கு மேலும் 85 பேர் பலி - உயிரிழப்பு 514 ஆக உயர்ந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில் ஈரானில் மேலும் 85 பேர் பலியாகினர்.
மருத்துவ பரிசோதனைக்காக வரிசையில் நிற்கும் மக்கள்
மருத்துவ பரிசோதனைக்காக வரிசையில் நிற்கும் மக்கள்
Published on

சீனாவில் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான இந்த வைரஸ் வேகமாக மற்ற மாகாணங்களுக்கும் பரவியது.

இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால் தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது.

சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.

இந்த மூன்று நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 85 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததாகவும் கொரோனா பலி எண்ணிக்கை 514 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஈரான் அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com